தினமும் உனை சித்தரிக்க வைக்கும்
என் சித்த வைத்தியகாரிக்கு,
உயிரில் மெழுகாய் உருகும்
உன் கடைக்கண்களுக்கு
நான் படைக்கும் இக்கவிதையினை
பரிசாக உணர்வுக்குள் பதித்துக்கொள்,
உண்மையை உளறுகிறேன் கேள்
உறங்க முடிவதில்லை உன்னால்.
ஏன்?
ஆசைகளுக்கு பிறப்பிடம் காதல்
என் காதல் சுமக்கப்பட்ட இடம் உன் இதயம்
அதனை பிரசவித்தவள் நீ
என் ஆசைகளுக்கு நீதான் தாய்.
எப்படி?
எனை உறங்க வைத்தாய்,
தட்டிக் கொடுத்தாய்,
பாசமாக முத்தம் கொடுத்தாய்,
உறக்கத்தில் உளற வைத்தாய்,
வாயில் உணவு திணித்தாய்,
குளிக்க வைத்தாய்,
எனக்கு கதைப் படித்தாய்,
வெயிலில் நனைய வைத்தாய்,
மழையில் வியர்க்க வைத்தாய்,
மனதில் தங்க வைத்தாய்,
இதயத்தில் குடி பெயந்தாய்,
எண்ணங்களில் உருவெடுத்தாய்,
செவிகளில் குழல்கள் இசைத்தாய்,
இப்படி அனைத்தையும்
எனக்குள் தந்தாய்.
நீ என் தாய்தானே - MJ
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment