Sunday, 17 May 2009

உனக்கும் எனக்கும்

உனக்கும் எனக்கும்
இடையில் நீர் உறிஞ்சியா?
பார்வையால் சுண்டி
உன் விழிகளின் நடுவில்
குடி வைத்தாயடி என் மனதை.

உமக்கு எத்தனை இமைகள்?
சிமிட்டியதில் உதிர்ந்தும்
அதன் முழுமை குறைவதில்லையே.

ஏன் சிரித்தாய்
வாய்த்திறவாமல்
என் எண்ணத்தில் ஊறி
நாவில் உருபெறும் உமிழ்நீர்
மீண்டும் சதைகளில் படிகிறதே.

உம் கால் விரல் நகத்தினை
இன்றுதான் கண்ணுற்றேன்
தூசு படிந்த தரைகளில்
பேசும் படமாய் திரைக்காண்பதை..

இன்னும் நேசிக்கிறேன் உன் . . . . . . . . . . . . .

- முகில்

1 comment:

  1. Amazing....not oni she... But who eva read ur poems can feel ur love.

    ReplyDelete