Sunday 17 May 2009

குற்றம் புரிந்த தேவைதை

என்ன குற்றம்
பதித்த இவளை
கடவுள் பூமியில்
படைத்த காரணம்?

என்ன புண்ணியம்
புரிந்த என்னை
இவளுடன் இன்றைக்கு
பேச கிடைத்த தருணம்?

இதன் பெயர்
நியதியா?
இல்லை
விதியா?

கனவா?
இல்லை
நினைவா?

5.00 மணி சூரிய உதயம்
வெள்ளி 7.40 இரவில்
என் அருகில்
உதிக்க கண்டேன்

உடைகள் நீலத்தால்
உலரும்


உடலே நீலத்தால் உலர்ந்து
உண்மையுருவில்
இவளே இறகு
விடுத்த
தேவதையென வியக்கிறேன்.

இவள் குற்றம் புரிந்த தேவதை.. . . . . .
- முகில்

உனக்கும் எனக்கும்

உனக்கும் எனக்கும்
இடையில் நீர் உறிஞ்சியா?
பார்வையால் சுண்டி
உன் விழிகளின் நடுவில்
குடி வைத்தாயடி என் மனதை.

உமக்கு எத்தனை இமைகள்?
சிமிட்டியதில் உதிர்ந்தும்
அதன் முழுமை குறைவதில்லையே.

ஏன் சிரித்தாய்
வாய்த்திறவாமல்
என் எண்ணத்தில் ஊறி
நாவில் உருபெறும் உமிழ்நீர்
மீண்டும் சதைகளில் படிகிறதே.

உம் கால் விரல் நகத்தினை
இன்றுதான் கண்ணுற்றேன்
தூசு படிந்த தரைகளில்
பேசும் படமாய் திரைக்காண்பதை..

இன்னும் நேசிக்கிறேன் உன் . . . . . . . . . . . . .

- முகில்

உனக்கும் எனக்கும்

கிடப்பையில் கிடந்தவை

பொய் முகம்

வழக்கத்திற்கு மாறாக ஏனோ
இன்று பொய்யாய் நடித்து
நிஜ முகத்தை தற்காலிகமாய்
அடகு வைத்துள்ளேன்

போர் களத்தில் தளபதியுடன்
படைகளை திரட்டி
ஆயுதங்கள் வைத்திருந்தோம்

என் பொய் முகம் கண்டு
படையினில் ஒரு சிப்பாய்
என்னையே நோட்டம் பார்த்து
முதல் அம்பு எய்திட
எனை பிரசுரித்தார்

மாறாக அவரே
தளபதியின்
ஆணையின் கீழ்
அம்புவிட பெயர்தெடுத்திட்டார்

பொய்முகம் எனை
துன்பப் படுத்தினாலும்
வழியின்றி பறைசாற்றுகிறேன்
என் அதிகாரப் பூர்வ பணியில்

நலம் எனும் சொல்
தனக்கென்பதில்
இன்னும் இனிமை
அதிகம் கண்டிருந்தேன்.
-முகில்

Monday 16 February 2009

மரபுக்கவிதை எழுதவா?

என் மனம் ஒரு குரங்கு,
நீ அமைதியாய் கொஞ்சம் உறங்கு,
இந்த கள்வனுக்கு மனம் இரங்கு,
நம் காதலை உணர்வினில் தொடங்கு. - MJ

மரபும் உருபும் மாறும்,
எறும்பும் உடும்பும் ஊறும்,
விஷமும் நஞ்சும் ஏறும்,
காதலும் சாதலும் கூறும். - MJ

என் ஜூனியர்ஸ்

நட்பு பழகியதால் அல்ல
பழக்கப்படுவதால் - முகிலன்


















ஆனந்தன் குமார்

















சதிஷ் குமார்














மகேஷ்வரன்


திஷோக் குமார்

என் ஆருயிர் நண்பர்கள்

படிக்கும் காலங்களில்
படித்திட மறந்து
நண்பனுடன் பறந்திட
மனசு துறந்தது. - முகிலன்












நாகநாஜன்








பர்மா












கணேஷ்குமார்












கார்த்திகேசு - முகிலன்