Sunday, 17 May 2009

கிடப்பையில் கிடந்தவை

பொய் முகம்

வழக்கத்திற்கு மாறாக ஏனோ
இன்று பொய்யாய் நடித்து
நிஜ முகத்தை தற்காலிகமாய்
அடகு வைத்துள்ளேன்

போர் களத்தில் தளபதியுடன்
படைகளை திரட்டி
ஆயுதங்கள் வைத்திருந்தோம்

என் பொய் முகம் கண்டு
படையினில் ஒரு சிப்பாய்
என்னையே நோட்டம் பார்த்து
முதல் அம்பு எய்திட
எனை பிரசுரித்தார்

மாறாக அவரே
தளபதியின்
ஆணையின் கீழ்
அம்புவிட பெயர்தெடுத்திட்டார்

பொய்முகம் எனை
துன்பப் படுத்தினாலும்
வழியின்றி பறைசாற்றுகிறேன்
என் அதிகாரப் பூர்வ பணியில்

நலம் எனும் சொல்
தனக்கென்பதில்
இன்னும் இனிமை
அதிகம் கண்டிருந்தேன்.
-முகில்

No comments:

Post a Comment