பதித்த இவளை
கடவுள் பூமியில்
படைத்த காரணம்?
என்ன புண்ணியம்
புரிந்த என்னை
இவளுடன் இன்றைக்கு
பேச கிடைத்த தருணம்?
இதன் பெயர்
நியதியா?
இல்லை
விதியா?
கனவா?
இல்லை
நினைவா?
5.00 மணி சூரிய உதயம்
வெள்ளி 7.40 இரவில்
என் அருகில்
உதிக்க கண்டேன்
உடைகள் நீலத்தால்
உலரும்
உடலே நீலத்தால் உலர்ந்து
உண்மையுருவில்
இவளே இறகு
விடுத்த
தேவதையென வியக்கிறேன்.
இவள் குற்றம் புரிந்த தேவதை.. . . . . .
- முகில்